பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினைக்குதீர்வு மன்மோகன்சிங்

Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 9 - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள், பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பின் போது பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில்,  பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எப்போதும் செவிசாய்த்து வருகிறது. திரிணாமுல் எம்.பிக்கள் பிரதமரை சந்தித்து பேசும் போது சில விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதே போல் பிரதமரும் இப்போதைய நடைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வார் என கருதுகிறேன் என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.  டீசலுக்கு இரட்டை விலை திட்டத்தை அமல்படுத்த யோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் மக்களவையில் அண்மையில் கூறினார். எனினும் இந்த திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது. இரட்டை விலை திட்டத்தின்படி விவசாயிகள் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே மானிய விலையில் டீசல் விநியோகம் செய்யப்படும். சொகுசு வாகனங்களை பயன்படுத்துவோருக்கு கூடுதல் விலையில் டீசல் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சல்மான் குர்ஷித்திடம் கேட்ட போது அத்தகைய கருத்து பொதுமக்களிடம் நிலவுவது உண்மைதான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ