முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார ஒத்துழைப்பு வேண்டும் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

அட்டு(மாலத்தீவு), நவ.- 12 - தெற்காசிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பு அவசியம் வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். மாலத்தீவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது,  சர்வதேச பொருளாதாரம் மெதுவாக வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த நேரத்தில் தெற்காசியாவில் வளர்ச்சிக்கான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். நமக்கு இடையே வர்த்தக உறவுகளை சீராக்குவதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் பயன் அளித்து பயனடையவும் முடியும். நமது பகுதியை வளமான பகுதியாக்க முடியும். தெற்காசியாவில் தடையற்ற சீரான வர்த்தகம் நடைபெறவேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.  தொலைத் தொடர்பு ஒளிபரப்பை சார்க நாடுகளிடையே அதிகரிக்க வேண்டும். நமது நாட்டு மக்கள் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகளின் மக்களைப் பற்றியும் அவர்களது திறமை, கலாசாரம் உள்ளிட்டவற்றையும் ஒருவருக்கு ஒருவர் நன்கு தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு வலுப்பெறும். நமது நாடுகளின் பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரிக்க வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்காமல் வளர்ச்சி சாத்தியமாகாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளை எதிர்கொண்டு நமது நோக்கங்களையும் கனவுகளையும் வென்றெடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்