முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் அருகே வனஊழியர் - மனைவி நடுரோட்டில் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில்,நவ.-12​​- நாகர்கோவில் அருகேயுள்ளது சுசீந்திரம், இதனை அடுத்துள்ள தேரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது.50) இவர் ஆரல்வாய்மொழியிலுள்ள வனச்சரக அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி யோகீஸ்வரி(வயது.42) இருவரும் நேற்று முன்தினம் மாலை கோட்டார் திருமணமண்டபத்தில் வைத்து நடந்த அவர்களது உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் இரவு 9 மணிக்கு  ஆறுமுகம் தனது பைக்கில் மனைவி யோகீஸ்வரியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். பைக் சுசீந்திரம் அக்கரையிலிருந்து தேரூர் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தபோது அப்போது அந்த வழியாக வந்த மர்மகும்பல் ஆறுமுகம் தம்பதியினர் சென்ற பைக்கை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த கைத்துப்பாக்கியால் ஆறுமுகத்தையும் அவரது மனைவியையும் சுட்டனர். அந்த துப்பாக்கி சூட்டில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்தனர். அதனைக் கண்டு மர்மகும்பல் தப்பி ஓடியது. சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்களை அந்த வழியாக வந்த 2 பேர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.  மருத்துவர் பரிசோதனையின் போது ஆறுமுகத்தின் தலை, இடது பக்க காதுக்குபின்புறம், கை, வலது பக்கவயிறு உள்பட 5 இடங்களில்குண்டு பாய்ந்திருந்தது தெரியவந்தது, யோகீஸ்வரிக்கு கழுத்தில் மட்டும் குண்டு பாய்ந்திருந்தது. இந்த சம்பவம் அறிந்ததும் நெல்லை சரக டி.ஐ.ஜி வரதராஜூ, மாவட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஒரு தோட்டா கிடந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த தோட்டா அரசுத்துறைக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அந்த தோட்டா, காவல்துறைக்குரியதா? அல்லது வனத்துறைக்குரியதா? என்று கண்டறிய தடவியல் நிபுணர்கள் நெல்லையிலிருந்து வரவழைக்கப்பட்டு ஆய்வு நடக்கிறது. சம்பவ இடத்தில் யோகீஸ்வரியின் நகைகள் சிதறிகிடந்தன. மேலும் சில நகைகள் காணவில்லை. கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் - யோகீஸ்வரியின் தம்பதிக்கு முத்துக்குமார் என்ற அசோக்(25) என்ற மகனும் அனுஷா(வயது.21) என்ற மகளும் உள்ளனர். அசோக் சென்னையிலுள்ள ஒரு தனியார் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அனுஷா நாகர்கோவில் அருகேயுள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.

புட்நோட்

1.சுட்டுக்கொல்லப்பட்ட வனச்சரகர் ஆறுமுகம், அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோரின் பழைய படம்.

2. சுட்டுக்கொல்லப்பட்ட வனச்சரகர் ஆறுமுகம், அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோர் பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!