முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் போராட்ட குழுவின் கேள்விகளுக்கு 1 வாரத்தில் பதில் :நாராயணசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

நெல்லை நவ 12.மத்திய மந்திரி நாராயணசாமி நேற்று நெல்லை வந்தார். நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக மத்திய மாநில அரசு குழுக்கள் கடந்த வாரம் நெல்லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். மத்திய அரசு குழுவிடம் போராட்ட குழுவினர் 6 முக்கிய கேள்விகளை கொடுத்து பதில் கேட்டுள்ளனர். அதற்கு விஞ்ஞானிகள் குழு பதில் தயாரித்து வருகிறது. இந்த வாரத்தில் அந்த 6 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். இதற்கிடையே போராட்ட குழு பல இடங்களுக்கு சென்று தவறான தகவல்களை பரப்பி வருகிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலைய கதிர்வீச்சு குழந்தை தரிப்பதை பாதிக்கும் என ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையம் உலகிலேயே தரம் வாய்ந்த ரஷ்ய விஞ்ஞான தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டது. விமானமே வந்து மோதினாலும் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சுனாமி, பூகம்பம் வந்தாலும் பாதிப்பு இருக்காது. அணு உலையை குளிர்வித்திருக்க ஜெனரேட்டர் மின்சாரம் மூலமாகவும், பேட்டரி மின்சாரம் மூலமாகவும் வெளியில் இருந்து தண்ணீரை கொண்டும், ஹைட்ரஜனை உள்ளே செலுத்தியும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துபவர்கள் இந்த விபரம் தெரியாமல் பேசுகிறார்கள்.  இடிந்த கரையில் போராட்டம் நடத்துவதால் பல மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, மாணவ மாணவியர் கல்லூரிக்கு செல்லவில்லை. வர்த்தகம் பாதித்துள்ளது. அணுமின் நிலையம் பாதுகாப்பானது இல்லையென்றால் எப்படி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞாணிகள் வசிப்பார்கள். மத்திய மாநில அரசுகளுக்கு தனிப்பட்ட நபர் பிரச்சனையை விட மக்கள் பாதுகாப்பில் அக்கறை உள்ளது. போராட்டத்தை யார் தூண்டி விட்டது என்பதை விசாரிக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். மத்திய அரசு விளக்கம் அளிக்கும் முன்பே போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது.  தற்போது கூடங்குளத்தில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடக்கிறது. முதல் அணு உலை 99 சதவீதம் பணி முடிந்து மின்சார உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கிறது. 2வது அணு உலை 95 சதவீதம் முடிந்துள்ளது.  டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கவேண்டும். இறுதி முடிவு எடுக்க 2 அரசும் அக்கறையுடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago