எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.12- மழை வெள்ளத்தால் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.11 அன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் பெருமாள், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சிவராஜன் மற்றும் திருக்கழுக்குன்றம், வயலூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் செல்வராஜ் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகரும் துயருற்றேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருச்சியில் தமிழ்மொழி போர் தியாகி சின்னசாமிக்கு திருஉருவசிலை -ஜெயலலிதா
சென்னை, நவ.13- திருச்சியில் தமிழ்மொழி போர் தியாகி சின்னசாமிக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும் போற்றி பெருமைப்படுத்த வேண்டியதும், அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும். தமிழ் மொழிக்கு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த பெருமக்களுக்கு பெருமை சேர்ப்பதில் எனது அரசு உரிய முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. உயிரினும் மேலாக நாம் போற்றி வணங்கும் அன்னைத் தமிழ் மொழிக்கு இந்தி ஆதிக்கத்தால் ஆபத்து வந்த நேரத்தில், செந்தமிழுக்கு ஒரு தீங்கு எனில் இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ எனக் கேட்டு செந்தணலுக்கு தன்னை இரையாக்கிக் கொண்டவர் தியாகி சின்னச்சாமி.திருச்சிராப்பள்ளி, ரயில்வே சந்திப்பில், 24.1.1964 அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது, தியாகி சின்னச்சாமி திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய வாசலில், விடியற்காலை 4.30 மணிக்கு, தனது இன்னுயிரைத் துச்சமென மதித்து, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, தனது உடல் பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையிலும், தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று முழங்கியவாறு தமிழ் மொழிக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது அவருக்கு 27 வயதே ஆகும். 1964 ஆம் ஆண்டு தியாகி சின்னச்சாமியின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்த எம்.ஜி.ஆர். உடனடியாக சின்னச்சாமியின் குடும்பத்தாருக்கு 5,000/- ரூபாய் நிதி அளித்து உதவினார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. 21ஆம் ஆண்டு துவக்க விழாவில் மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் குடும்பத்தாருக்கு நான் 50,000/- ரூபாய் நிதி உதவி வழங்கினேன். தமிழுக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகி சின்னச்சாமியின் பெருமையைப் போற்றி, அவரது நினைவை வணங்கி, 1995 ஆம் ஆண்டு எனது தலைமையிலான கழக அரசின் ஆட்சியில் தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டில், மொழிப்போர் தியாகி சின்னச்சாமி குடும்பத்தாருக்கு மேலும் 50,000/- ரூபாய் வழங்கினேன். திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்னூர், அண்ணா நகரில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் கல்லறையில் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் நினைவாக ஜனவரி 25 ஆம் நாளில் அனுசரிக்கப்படும் வீரவணக்க நாள் அன்று தமிழ் ஆர்வலர்களும், தமிழ் தொண்டர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். இந்தத் தருணத்தில் அவருடைய புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் தாய்மொழித் தமிழுக்காக தன் உயிரைத் துச்சமென மதித்து உயிர் nullத்த மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் நினைவைப் போற்றி திருச்சிராப்பள்ளியில் அன்னாரின் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு உதவ மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவு
17 Nov 2025கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
17 Nov 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது
17 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ


