முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்-அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ. - 21 - எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க தவறினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆசிய, பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் லிப்பெர்ட் கூறியதாவது. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துருப்புகளின் மீது தலிபான், ஹக்கானி உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களினால் சுற்றியுள்ள பிராந்தியங்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவது அந்நாட்டின் கடமையாகும். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்கா எவ்வித நடவடிக்கையையும் எடுக்க தயங்காது. ஆனால் அத்தகைய சூழ்நிலைக்கு இடம் கொடுக்காமல் ஒத்துழைப்பு தருவதே பாகிஸ்தானுக்கு நல்லது.  பயங்கரவாத குழுக்களால் ஆப்கானிஸ்தானின் ஸ்தரத் தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு ஆதரவு தர வேண்டியது பாகிஸ்தானின் கடமை. மேலும் அத்தகைய சூழல் உருவாக பயங்கரவாத குழுக்களை நீடிக்க விடக்கூடாது.  இந்த பயங்கரவாத குழுக்களின் தொடர்புகளினால் அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்குமே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பிராந்தியத்தின் அமைதி வளர்ச்சி பாதுகாப்பு ஆகியவை நிலைபெற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவே அமெரிக்கா விரும்புகிறது. அணு ஆயுத வல்லமை பெற்ற நாடு என்பதாலும் பயங்கரவாத குழுக்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாலும் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடனான உறவு எங்களுக்கு முக்கியமானதாகும். அதே போல் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்சினைகளின் தீர்வும் இப்பிராந்தியத்தின் நலனை சார்ந்ததுதான். சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது அணு ஆயுத பாதுகாப்பை உறுதி செய்வதுடன் நீடித்த நிலையான நாட்டுக்கு அமைதி தரக் கூடிய ஜனநாயக ரீதியிலான தலைமையை கொண்ட அரசு பாகிஸ்தானில் அமைவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்