தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் மாற்றம்-ஜெயலிலதா

Image Unavailable

சென்னை, நவ.- 22 - தூத்துக்குடி மாவட்ட மீனவர் பிரிவு மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகளை மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் (நவ.20-ந்தேதி) முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட மீனவர் பிரிவுத் தலைவர் பொறுப்பிலிருக்கும் ஏ.டார்சன் செயலாளர் பொறுப்பிலிருக்கும் எஸ்.அகஸ்டின், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் எம்.ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொறுப்பிலும், தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பிலும், 31-வது வார்டு செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சி.செல்லப்பாவும், தூத்துக்குடி மாநகராட்சி மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் எட்வின் பாண்டியன் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மீனவர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் டெலக்ஸ் மஸ்கர்னாஸ் (ராஜீவ் நகர், லைன்ஸ் டவுன்), தூத்துக்குடி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் ஏ.டார்சன் (மறக்குடித்தெரு, புன்னக்காயல்) தூத்துக்குடி மாநகராட்இ 25-வது வட்ட செயலாளர் பொறுப்பில் டி.கருப்பசாமி (பத்ரகாளியம்மன் கோயில் தெரு), தூத்துக்குடி மாநகராட்சி மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் பி.சேவியர் (நூத்தம்மாள்புரம்) நியமிக்கப்படுகிறார்கள். கட்சியின் உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழுஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ