முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் போலி கம்பெனிகள்: இந்திய தூதரகம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பீஜிங்,டிச.3 - சீனாவில் போலி கம்பெனிகள் அதிகரித்துள்ளன. இவற்றுடன் பணபரிமாற்றம் செய்யும்போது இந்திய வணிகர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சீனாவில் உள்ள இந்திய வர்த்தக கவுன்சில் ஆலோசகர் நாகராஜ் நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, 

சீனா - இந்தியாவிடையே பல லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சீனாவில் அங்கீகாரம் பெறாத சிலர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் உள்ள கிராமப்புற வர்த்தகர்களை குறி வைத்து இந்த மோசடி நடைபெறுகிறது. இன்டர்நெட் மூலம் சீனத்தில் இருந்து இந்திய வர்த்தகர்கள் பல பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். பண பரிமாற்றமும் இன்டர்நெட் மூலமே நடக்கிறது. இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்தை போலி கம்பெனிகள் தங்களது பெயரில் பெற்றுக் கொண்டு சீன வியாபாரிகள் தலைமறைவாகி விடுகின்றனர். மோசடி தொடர்பாக இந்த ஆண்டு மட்டும் தூதரகத்திற்கு 66 புகார்கள் வந்துள்ளன. கணிசமான தொகையை முன்பணமாக பெற்றுக் கொண்ட பின் எந்த தகவலும் இல்லை என்று சீன கம்பெனிகள் மீது இந்தியாவில் இருந்து புகார் அனுப்பி உள்ளனர். அவர்கள் தெரிவித்த முகவரிகளில் விசாரித்த போது அது போலி முகவரி உள்ள கம்பெனிகள் என்று தெரியவந்துள்ளது. எனவே சீன கம்பெனிகளுடன் வர்த்தக தொடர்பு வைத்து கொள்ள விரும்பும் இந்தியர்கள் ஒரு முறைக்கு இரு முறை நன்கு விசாரணை செய்து பண பரிமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago