முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.யையும் கொண்டுவர வேண்டும் - கிரண்பேடி

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 8 - லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.யையும் கொண்டு வர வேண்டும் என்று  அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள கிரண் பேடி தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் வரம்பிற்குள் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருப்பவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று பிரபல  சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் லோக்பால் சட்ட வரம்பிற்குள் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யையும் கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள கிரண் பேடி  கேட்டுக்கொண்டுள்ளார். லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.யையும் கொண்டு வராவிட்டால் லோக்பால் சட்டத்தின் நோக்கத்தில் அர்த்தமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமரைக் காட்டிலும் லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.யைக் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்றும் அப்போதுதான் அந்த புலனாய்வு அமைப்பு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த முடியும் என்றும்  அப்போதுதான் லோக்பால் அமைப்பு சரியான முறையில் இயங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.யை  சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் வற்புறுத்த வேண்டும் என்றும் கிரண் பேடி கேட்டுக்கொண்டார். லோக்பால் சட்ட வரம்பிற்குள் சி.பி.ஐ.யை கொண்டு வந்தால் அந்த புலனாய்வு அமைப்பின் மீதான அரசு கட்டுப்பாடு  நீக்கப்பட்டு விடும் என்றும் அதனால் சி.பி. ஐ. சுதந்திரமாக செயல்படும் என்றும் அவர் கூறினார். லோக்பால் மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில்  அந்த மசோதா குறித்து ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழு தனது சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் கிரண் பேடி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது.

லோக்பால் வரம்பிற்குள் சி மற்றும் டி கிரேடு அரசு ஊழியர்களையும் கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர்  வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்