முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: ப.சிதம்பரம் கருத்துக்கூற மறுப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.9 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையில் சுப்பிரமணியசுவாமி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு கருத்துக்கூற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மறுத்துவிட்டார். 

2ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு விலை நிர்ணயம் செய்ததில் தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு. அதனால் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக்கோரி டெல்லி சி.பி.ஐ.கோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நேற்றும் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் சுப்பிரமணியசுவாமி ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் சாட்சிகளை விசாரிக்கவும் சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கருத்துக்கூற ப.சிதம்பரம் மறுத்துவிட்டார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பார்வையிட அமைச்சர் ப.சிதம்பரம் வந்திருந்தார். அப்போது கோர்ட்டு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்குமாறு நிருபர்கள் கேட்டனர். ஆனால் அதற்கு ப.சிதம்பரம் மறுத்துவிட்டார். முன்னதாக கண்காட்சியை அவர் குத்துவிளக்கேற்றிவைத்து தொடங்கிவைத்தார். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் அவர் புறப்பட்டு சென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்