முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பலி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,டிச.- 10 - கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறி பலியானார்கள். மற்றும் பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. கொல்கத்தா நகரின் தென்பகுதியில் உள்ள தகுரியாவில் ஏஎம்ஆர்ஐ தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை 7 அடுக்குமாடிகளைக்கொண்டது. இதில் 170 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. அதனுடன் புகை மண்டலமும் கிளம்பியது. இதனால் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 70-க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்திணறி பலியானார்கள். அவர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நேற்றுமதியம் வரை 40-க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடல்கள் தெற்கு கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மருத்துவமனையில் தீ விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் முதல்வர் மம்தா அங்கு விரை சென்று மீட்புப்பணிகளை கவனித்தார். அடையாளம் தெரியாத உடல்களின் முகங்கள் கலரில் போட்டோ எடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு தொங்கவிடப்பட்டுள்ளன. இது உடல்களை அடையாளம் காண உதவியாக இருக்கும் என்று மம்தா கூறினார். உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச்செல்லப்படும். முதல் தகவல் அறிக்கையின்படி முதலில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா கூறினார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தலைமறைவாகிவிட்டனர். தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தினர் அரசு வேலை கேட்டால் அவர்களுக்கு உதவி செய்ய நாங்கள் முயற்சி செய்வோம் என்றும் மம்தா தெரிவித்தார். மேற்குவங்காள வரலாற்றிலேயே இந்த மாதிரியான கொடூரமான தீ விபத்து ஏற்பட்டதில்லை. பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கு மருத்துவமனை சார்பாக தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என்று நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். ஆஸ்பத்திரியில் தீ விபத்து ஏற்பட்டு 2 மணி நேரம் கழித்துத்தான் தீயணைப்பு படையினர் அங்கு சென்றனர். அதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மாடிகளில் கிடந்த உடல்களையும் காயம் அடைந்தவர்களையும் கயிறு மற்றும் ஏணிகள் மூலம்தான் தீயணைப்பு வீரர்கள் மீட்டி கொண்டு வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்