முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இருந்து சுவாமி நீக்கம்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

நியூயார்க், டிச. - 10 - ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியை அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகம் நீக்கியுள்ளது.  மேலும் அவர் கற்றுத் தரும் 2 பொருளியல் பாடப் பிரிவுகளையும் நிர்வாகம் நீக்கியுள்ளது. 2011 ஜூலை 16 ம் தேதி மும்பையில் இருந்து வெளியாகும் டி.என்.ஏ நாளிதழில் முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரையை சுவாமி எழுதினார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஹார்வர்டு பல்கலைக் கழகம் அவரை நீக்கியுள்ளது. 2012 ம் ஆண்டுக்கான பாடப் பிரிவுகள் குறித்த இறுதி முடிவெடுக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் கூட்டம் நடந்தது. அப்போது சுவாமியால் எடுக்கப்பட்டு வரும் 2 பொருளியல் பாடங்களை நீக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony