முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேன் நிலவுக்கு சென்ற தம்பதிகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

குர்காவூன், டிச.14 - தேன் நிலவுக்கு சென்றபோது புதுமண தம்பதியினர் இருவர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்கள். அரியானா மாநிலம்  குர்காவூன் நகரைச் சேர்ந்தவர்கள் லோவிஷ் பானட் (வயது 28), அனுபமா (வயது 26).

இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்களது தேன் நிலவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு லாஸ்வேகாஸ் நகரில் ஒரு ஹெலிகாப்டரில் இவர்கள் சுற்றுலா தலம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த புதுமண தம்பதியினர் பரிதாபமாக  பலியானார்கள்.

இந்த துயரச்சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சன்டேன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் கூறுகையில், இதுபோன்ற விபத்துக்கள் ஏற்கனவே கடந்த காலங்களிலும்கூட நடைபெற்றுள்ளன. இது திரும்ப பெற முடியாத பேரிழப்பு என்று கூறியுள்ளது.

இந்த சாவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று  இந்தியாவில் உள்ள புது மண தம்பதியரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். லிக்கா இன்வெஸ்ட் மென்ட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லோவிஷ் இருந்து வந்தார். இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. அமெரிக்காவில் பலியான புதுமணத்தம்பதியினரின் உடல்களை  இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்