முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காத சோனியா காந்தி

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. - 19 - நாடாளுமன்ற விவாதங்களில் முன்னிலையில் இருப்பவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ். இதுவரை 78 விவாதங்களில் இவர் பங்கு பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ஒரு விவாதத்திலும் இதுவரை பங்கு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  நாடாளுமன்றத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற 78 விவாதங்களில் இவர் பேசியுள்ளார். பெண் எம்.பிக்களில் இவர்தான் மிக அதிகளவு விவாதங்களில் பங்கு பெற்றவர். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒரு விவாதத்திலும் இதுவரை பங்கு கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு நிதியை செலவிடுவதில் சுஷ்மாதான் முன்னிலையில் உள்ளார். இவருடைய தொகுதியான விதிஷாவின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 9 கோடியில் இவர் இதுவரை 6.35 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இதுவும் நாடாளுமன்ற உறுப்பினரிடையே மிக அதிகமாகும். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்