முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபையில் மந்திரி ரவி மகள் போட்டியில்லை-வயலார் ரவி

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,மார்ச்.- 14 - கேரள மாநில சட்டசபை தேர்தலில் தம் மகள் போட்டியிடும் திட்டம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.  கேரளாவிலும் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தன் மகள் லட்சுமி ரவி, கோட்டயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று வயலார் ரவி தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வயலார் ரவி, கோட்டயம் தொகுதியில் என் மகள் லட்சுமியை நிறுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் இது குறித்து கட்சி மேலிடத்தில் நான் கலந்தாலோசிக்கவில்லை.
மேலும் என் மகள் லட்சுமி தேர்தலில் போட்டியிடுவதற்கு என் நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கட்சி நலனை கருத்தில் கொண்டு என் மகள் போட்டியிடும் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டேன் என்றார்.கோட்டயம் தொகுதியில் என் மகளுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நிறத்தலாம் என்று நான் தனிப்பட்ட முறையில்தான் நினைத்தேன். என்னுடைய மனைவி மெர்சி, இந்த தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனால் இந்த தொகுதியில் நாங்கள் பாரம்பரியமாக போட்டியிடலாம் என்று கருதினோம். வயலார் ரவி மனைவி மெர்சி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்