முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் மேலாண்மைக் குழு: வைகோ குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் சதித்திட்டத்துக்கு மத்திய அரசு பகிரங்கமாக உடந்தையாக உள்ளது'' என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தெடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்தமிழ்நாட்டின் வாழ்வையே நாசமாக்க முனைந்துவிட்ட, கேரள அரசியல் கட்சிகளின் சதித்திட்டங்களுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக உடந்தையாகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது பகிரங்கமாகவே கேரளத்துடன் சேர்ந்துகொண்டு, தமிழகத்தை வஞ்சித்து, அnullதி இழைக்கிறது. அதனால்தான், பிரதமர் தலைமையில் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து, nullகம்பத்தால் முல்லைப்பெரியாறு பகுதிக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்ய அறிவித்து உள்ளது.

இது குறித்து, நேற்று பிரதமர் மன்மோகன்சிங்க்கு நான் எழுதி உள்ள கடிதத்தல், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், முல்லைப்பெரியாறு குறித்து குழு அமைத்தது, தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு செய்துள்ள, பொறுக்க முடியாத மேலும் ஓர் அnullநீதி ஆகும். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில், மத்திய அரசு, 2004 முதல், தமிழ்நாட்டுக்குத் துரோகங்களையே இழைத்து வருகின்றது.

தற்போது, அணையின் வலிமை உள்ளிட்ட நிலைமையை உச்ச nullநீதிமன்றம் nullநீதிபதி ஆனந்த் குழு ஆய்வு செய்து, அறிக்கை தர இருக்கின்ற நிலையில், தேசியப் பேரிடர் ஆணையக் குழுவை உங்கள் அரசு நியமித்த செயல், உங்கள் அரசு கேரளாவின் சொல்படிதான் ஆடுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கி விட்டது. 

தேசியப் பேரிடர் ஆணையக் குழுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று, முதல் அமைச்சர், நியாயமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். பேரிடர் மேலாண்மை நடவடிக்கை என்ற பெயரால், மத்திய காங்கிரஸ் அரசு, இந்திய ஒற்றுமை உடையும் பேரிடருக்கே வழிவகுக்கின்றது. எனவே, மத்திய அரசு எடுத்து உள்ள இந்த நடவடிக்கையை, உடனடியாக ரத்துச் செய்யவேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்