முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றப் பத்திரிகையில் உள்ளவர்கள் ஆஜராக சம்மன்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.- 22 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 3-வது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பவர்கள் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1.80 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ., தனது முதல் இரண்டு குற்றப்பத்திரிகைகளை டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தாக்கல் செய்தது. அதில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒரு சிலைரைத் தவிர,முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச்செயலாளராக சித்தார்த்த பெகுரா, மற்றும் தி.மு.க. தலைவர் மகள் கனிமொழி உள்பட 16-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆ.ராசா, பெகுரா தவிர கனிமொழி உள்பட 11 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்தநிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புள்ளவர்கள் மற்றும் கம்பெனிகள் பெயர்கள் அடங்கிய 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. கடந்த 12-ம் தேதி அதே கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதனையொட்டி 3-வது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள எஸ்ஸார் குரூப் புரமோட்டர்ஸ் அன்சுமன், ரவி ரூயா, இயக்குனர் விகாஸ் சரப், லூப் டெலகாம் புரமோட்டர்ஸ் கிரன் ஹைதான், அவருடைய கணவர் ஐ.பி.ஹைதான் ஆகியோரும் வருகின்ற ஜனவரி 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு சிறப்பு நீதிபதி சைனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் லூப் டெலகாம் பிரைவேட் லிமிடெட், லூப் மொபைல் இந்தியா லிமிடெட், எஸ்ஸார் டெலி ஆகிய கம்பெனிகளும் 3-வது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்திய குற்றவியல் சட்டம் 420-வது பிரிவு120 பி, பிரிவின் கீழ்(கிரிமினல் சதி) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்