முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னமனூர் ராமமூர்த்தி குடும்பத்தினருக்கு நிதியுதவி

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.30 - முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சின்னமனூர் ராமமூர்த்தி குடும்பத்தினரிடம் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் நேரில் ஆறுதல் கூறியதுடன், அ.தி.மு.க. சார்பாக ரூ.1 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முல்லைப்பெரியாறு அணைத் தொடர்பாக தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தேனி மாவட்டம் சின்னமனூர் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி அவரது குடும்பத்தினற்கு ஆறுதல் கூறி கட்சி சார்பாக ரூ.1லட்சம் தொகையினை வழங்கினார்.      

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரைச் சேர்ந்த  ராமமூர்த்தி (35) அ.இ.அ.தி.மு.க தொண்டர். பாத்திரம் தொழில் செய்துவந்தார். கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்சனையால் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (28.12.2011) சின்னமனூரில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக கேரளா அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்துகொண்டு மேலும் மனம்வருந்தி தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.   இதனை அறிந்த  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகருக்கு நேரில் அனுப்பி அ.இ.அ.தி.மு.க சார்பில் ரூ.1லட்சம் தொகையினை இறந்தவரின் குடும்பத்தினர்களுக்கு வழங்கி ஆறுதல் கூறிவர் அனுப்பிவைத்தார்.      

அதன்படி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம்  சின்னமனூர் நகருக்கு உடனடியாக புறப்பட்டு வந்து இறந்தவரின் சகோதரி செல்வி, சகோதரர்கள் முருகன், வேல்ச்சாமி, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி அ.இ.அ.தி.மு.க சார்பாக ரூ.1லட்சம் தொகையினை வழங்கினார்.      அப்போது தேனி மாவட்ட செயலாளர் (அ.இ.அ.தி.மு.க) மற்றும் கம்பம் நகரமன்றத் தலைவருமான சிவக்குமார், சின்னமனூர் நகரமன்றத் தலைவர் சுரேஷ், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்லமுத்து, தேனி நகரமன்றத் தலைவர் முருகேசன் உட்பட பல அ.இ.அ.தி.மு.க வைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!