முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் - புதுவை இடையே கரையைக் கடந்தது புயல்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - மிகத் தீவிரமான புயலாக மாறிய தானே, புதுச்சேரி கடலூருக்கு இடையே நேற்று காலை 6.30 முதல் 7.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது. தற்போது இது பலவீனமடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக கடலூர், புதுச்சேரி இடையே நிலை கொண்டுள்ளது. மேலும் பலவீனமடைந்து மேற்கு நோக்கி இது நகரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை புயல் புதுச்சேரியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் தானே நிலை கொண்டிருந்தது. அது புதுச்சேரி​கடலூர் இடையில் உள்ள கடலோரத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவில் இருந்தே புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது.சுமார் 140 கி.மீ. வேகத்தில் பேய்க் காற்று வீசியது. இதில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சரிந்தன. இதையடுத்து புதுச்சேரி, கடலூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இந் நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கடலூர் அருகே தானே புயல் கரையைத் தொட்டது. காலை 6.30 மணி அளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பயங்கர இரைச்சலுடன் புதுச்சேரி​கடலூர் இடையே புயல் கரையைக் கடந்தது.140 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் புதுச்சேரியிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்கள், மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்தன. புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. விழுப்புரம் கடலூரிலும் மரங்கள் வேரோடு சரிந்து போக்குவரத்து பாதித்தது. இதனால் புதுவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. புதுவையில் சூறாவளி காற்று காரணமாக கடல் பல மீட்டர் உயரத்துக்கு பொங்கி ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பெரும்பாலான இடங்களில் தனியார் செல்போன் டவர்களும் சேதம் அடைந்துள்ளதால் செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, கடலூரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. நேற்றுமுன்தினம்இரவு முதல் மின்சாரம் இல்லாததால் குடிநீnullர் சப்ளையும் தடைபட்டுள்ளது.

தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலலட்சம் ஏக்கர் பயிர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்த தகவலின் படி புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இது மேலும் உயர வாய்ப்புள்ளது.

இப்பேது புயல் வலுவிழந்து மேற்கு நேக்கி நகர்வதால், திருவண்ணாமலை, தருமபுரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.

புயல் பாதிப்பு குறித்து அறிய எண்கள்:

புயல் பாதிப்பு குறித்து அறிய சென்னை வானிலை ஆய்வு மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்த மக்கள் 1800 எண்ணிலும் தொடர்பு கொண்டு புயல் எச்சரிக்கை குறித்த தகவல்களைக் கேட்கலாம்.மேலும் சென்னை மாநகராட்சி தகவலுக்கு எண் 1913, திருவள்ளூர் மாவட்ட தகவலுக்கு: 27661200 ஆகிய எண்களையும் தெடர்பு கெள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்