முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேறிய 25 தீர்மானங்கள்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 25 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசைக் கண்டித்து ஐந்து தீர்மானங்கள் உள்ளன. இந்த தீர்மானங்கள் விவரம் வருமாறு:

1. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

2. சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்த, கட்சியின் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஙீஜெயலலிதாவுக்கு நன்றி!

3. தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு பாராட்டும், நன்றியும்! 

4. உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் !

5. தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றியும், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அறிவித்தும், சாதனைகள் பல படைத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும்!

6. தமிழ்நாட்டின் நிதி நெருக்கடியை சீர்செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கக் கோரி, முதலமைச்சர் ஜெயலலிதா,  பாரதப் பிரதமரிடம் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்குக் கண்டனம்!

7. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்தும் வண்ணம் அதனை அரசிதழில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தல்!

8. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு கொடுத்து, தொடர்ந்து நடைமுறைப்படுத்த ஆணை வெளியிட்ட ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

9. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி!

10. கச்சத் தீவு மீட்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா உச்சநீnullதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் சார்பாக வருவாய்த் துறையை சேர்த்துக் கொள்ள வேண்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

11. இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தையும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரும் தீர்மானத்தையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

12. தி.மு.க.வினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்த, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

13. மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்திற்கு முன்பே பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

14. மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணெயை வழங்காத திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு கண்டனம்!

15. திருப்nullர் சலவை, சாய தொழிற்சாலைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும்!

16. சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாத்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதில் முனைப்பு

காட்டி வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும்!

17. ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியும்,

பணியிடங்களை நிரப்பியும் சாதனை படைத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

18. மருத்துவக் கல்வி பயில பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க முயற்சிக்கும், திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ்

தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு கண்டனம்!

19. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் மாநில அரசின் உரிமைகளை

பறிக்கும், திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு கண்டனம்!

20. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான சட்டத்தை

இயற்ற திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசை வலியுறுத்தல்!

21. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை வழங்க, அவர்களின் அவல நிலையை

உலக அரங்கிற்கு கொண்டு சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

22. மீனவர்களின் நலனும், வாழ்வாதாரமும், உரிமையும் காக்கப்பட  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி!

23. சட்டம்​ஒழுங்கை நிலைநாட்டி, தமிழகத்தில் அச்சமற்று அனைவரும் வாழ வகை செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

24. கழகத்தின் நலன் காக்கும் பொருட்டு, கழகப் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்க சூளுரை!

25. தன்னலம் கருதா உழைப்பு, தளராத முயற்சி, தமிழகத்தின் உயர்வுக்கு தன்னையே அர்ப்பணிக்கும் தியாகம் ஆகிய

அனைத்தும் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களும் உறுதுணையாய் நிற்கும் சூளுரையும், தீர்மானமும்!

ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்