முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோசய்யாவுக்கு13 துணைவேந்தர்கள் நேரில் புத்தாண்டு வாழ்த்து

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 3 - தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ரோசய்யாவுக்கு, 13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நேரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினர். இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.முருகேசபூபதி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வீ.விஜயகுமார், பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.மீனா அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராமநாதன், தமிழ்நாடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.பிரபாகரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.முத்துச்செழின், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.சுடலைமுத்து, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.வைத்தியநாதன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் ஆகியோர் பங்கேற்று கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களைத் தவிர மத்திய சட்ட ஆணையத் தலைவர் நீதிபதி பி.வி.ரெட்டி, தமிழநாடு மாநில தகவல் ஆணையர் ஆர்.பெருமாள்சாமி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் எஸ்.கபிலன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்று கவர்னருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago