முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை; கலெக்டர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.- 8 - மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு விழாவில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சகாயம் கூறுகையில்; தமிழக அரசின் உத்தரவின்படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிகட்டு வரும் 15,16 மற்றும் 17 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டை போல்  நடத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. சிறுவிதிமீறல் கூட இல்லாமல், காளைகளுக்கு எந்தவொரு தொந்தரவும்  இல்லாமல், கவனமாக செயல்படவேண்டும்.  தமிழநாட்டு மக்களின் மரபு மற்றும் கலாச்சார விழாவான இந்த ஜல்லிகட்டு விழாவை தொடர்ந்து நடத்த தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் பிராணிகளை சிறு அளவிலும் வதை செய்யாமல், காளைகளின் கண்களில் மிளகாய்பொடி தூவுவதோ, எந்தவொரு உபகரணத்தை கொண்டுதாக்கவும், காயப்படுத்தவோ கூடாது.  கும்பலாக வந்து களைகளை  பிடிக்க கூடாது. குறிப்பாக இளைஞர்கள் மது அருந்தி  எந்த சூழ்நிலையிலும் இந்த விழாவில் ஈடுபடக்கூடாது. மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு காளைகளுக்கு சிறு தொந்தரவும் இல்லாமல் சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு தரவேண்டும். வீரர்கள் அனைவரும் மருத்துவப்பரிசோதனைக்கு உட்பட்டிருக்கவேண்டும். விழாவில் கலந்துகொள்ளும் காளைகளை கடைசி நேரத்தில் பதிவு செய்வதை விட நேற்றே பதிவு செய்து இருந்தால் வசதியாக இருக்கும்.  கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாடுகளை பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சகாயம் கூறினார். 

இக்கூட்டத்தில் இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை ராமகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலிஅக்பர்,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) ஜெய்சிங்ஞானதுரை, வருவாய் கோட்டாட்சியர்கள் (மதுரை) துரைராஜ்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago