முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிரதமராக வாய்ப்பே இல்லை: பால்தாக்கரே

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜன.11 - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இந்திய பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனா கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது, காங்கிரசில் இப்போது தலைமை பண்புமிக்க தலைவர்கள் யாருமே இல்லை. காந்தி, நேரு காலத்தோடு அப்பண்புள்ள தலைவர்களும் மறைந்து விட்டனர். இந்த நிலையில் ராகுல் பிரதமராக வாய்ப்பே இல்லை. அந்த கேள்வியே எழவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தாக்கரே, இதற்கு நாடு மிகப் பெரிய கொடுக்க வேண்டியதிருக்கும். இது நாட்டை மீண்டும் ஒரு முறை பிளவுபடுத்துவதற்கான வழி. நான் கூறியதை இப்போதே நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளலாம். இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் நாட்டையே பிரிவினைக்கு எடுத்து செல்லும். சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக உள்ள அகமதுபடேல்தான் இது போன்ற குழப்பங்களுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்