முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் காண்டிராக்டர் மோதல்: 5 பேருக்கு கத்திக்குத்து

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜன.20 - மதுரையில் டெண்டர் எடுக்க வந்த  5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டுவதற்கான அரசு தரப்பில் ஒப்பந்தகாரர்களிடம் இருந்து ஒப்பந்தப்பள்ளிகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த அடிப்படையில் தடுப்பணைகட்டுவதற்கான டெண்டர்அளிப்பது நேற்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது. இந்த டெண்டர் எடுப்பதற்காக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தகாரர்கள் தலைமை பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அலுவலகத்திற்கு டெண்டர்விட்டுக்கொண்டிருக்கும்போது இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு அலுவலகத்திற்கு உள்ளேயே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெளியே வந்த ஒரு தரப்பினரை, மற்றொரு தரப்பினர் இரும்பு கம்பி, மரக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கினர்.ஒளஇதில் பரமக்குடியில் இருந்து வந்திருந்த சோமன், அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், சேகர், பாலமுருகன் ஆகிய 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மண்டையும் உடைக்கப்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குள் அனைவரும் ஓடிவந்ததை பார்த்த பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் பதறினர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 6 பேரை பிடித்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்