முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் கோபால் உட்பட 3 பேர் மீது அவதூறு வழக்கு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் உட்பட 3 பேர் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விபரம் வருமாறு:-

சென்னையில் இருந்து அச்சிட்டு வெளிவரும் நக்கீரன் வார இதழில் அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதையடுத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், பத்திரிகை நிருபர் உமர்முக்தார் ஆகியோர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி நக்கீரன் வார பத்திரிகை ஒரு அவதூறு செய்தி வெளியிட்டது. அந்த அவதூறு செய்தி தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த செய்தியில் உண்மை தன்மை கடுகளவும் கிடையாது. அந்த செய்தி மிகவும் உள்நோக்கம் கொண்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டுவதற்கு இவ்வாறாக செய்தி வெளியிடப்பட்டது. இது குற்ற உள்நோக்கம் கொண்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கம் கற்பித்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  ஆகவே இந்த அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் மற்றும் நிருபர் உமர்முக்தார் ஆகியோர் மீது இந்திய அவதூறு சட்டப் பிரிவு 500 மற்றும் 501-ன் கீழ் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

முதல்வரை அவதூறு செய்து நக்கீரன் வார இதழ் வெளியிட்டுள்ள செய்தியை இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளதால் அந்த பத்திரிகை மீதும் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு சட்டபடி நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்