முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான தொழிலாளர்கள் இறந்தால் குடும்ப ஓய்வூதியம்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - உடலுழைப்புத் தொழிலாளர்கள் மரணமடைந்தால் அவர் ஆணாக இருந்தால் மனைவிக்கும், பெண்ணாக இருந்தால் கணவருக்கும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.400 வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சிக் காரணமாக, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. இவர்களின் நலனைப் பேணும் வகையில் 1982 ஆம் ஆண்டில் தமிழக அரசால் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 6​ன்படி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது.  தொழிலாளர்கள் நலனில் குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் பணிகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மேன்மை அடைவதில் பெரிதும் அக்கறைக் கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது 1994 ஆம் ஆண்டில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தினை  ஏற்படுத்தினார்கள். தற்பொழுது கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று, ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளி இறந்து விட்டால், பெண் தொழிலாளியாக இருந்தால், அவரது கணவருக்கும், ஆண் தொழிலாளியாக இருந்தால்,  அவரது மனைவிக்கும் குடும்ப ஓய்வூதியமாக 400 ரூபாய் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.  இதன் பலனை கட்டுமானத் தொழிலாளர்கள் பெறும் வகையில், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தின் கூறு 13​க்கு உரிய திருத்தங்கள் வெளியிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago