முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. 26 - இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு முழுமையான அக்கறை காட்டவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதாக உதட்டளவில்தான் மத்திய அரசு கூறுகிறது. அக்கறை இருந்தால் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசுடன் மேற்கொண்ட உடன்பாட்டை காரணம் காட்டி அதை மறு பரிசீலனை செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. கடல் பரப்பில் தத்தளிக்கும் அல்லது திசை மாறிப் போகும் மீனவர்களின் உயிருக்கு ஊறு விளைவிக்க கூடாது என்பது சர்வதேச கடல் பாதுகாப்பு நெறிமுறை. ஆனால் அதை மீறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளது. தனது குடிமக்கள் தாக்கப்படுவது இந்தியாவுக்கே இழைக்கப்படும் அவமானமாக கருதாமல் மென்மையாக அணுகுவது ஏமாற்றம் அளிக்கிறது என்று டி. ராஜா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்