முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் மரத்தில் மோதி 2 டாக்டர்கள் உட்பட 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி. ஜன.27 - குற்றாலம் அருகே நேற்று அதிகாலையில் கார் மரத்தில் மோதியதில் 2 டாக்டர்கள் உட்பட 3 பேர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 டாக்டர்கள் உட்பட 3 பேர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  ராஜபாளையம் தேவதானம் காமராஜர் காலணியில் வசித்து வருபவர் டாக்டர் ரகுகுமரன்(வயது 29) இவர் முன்னாள் ராஜபாலையம் அதிமுக எம்.எல்.ஏ. தனுஷ்கோடியின் மகன் ஆவார் . இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் மதுரை எழில்நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் கார்த்திக் (வயது28) போடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் டாக்டர் தினேஷ் (வயது 28) ராஜபாளையம் பஜனைமடத்தெரு பகுதியை சேர்ந்த சங்கரகிருஷ்ணராஜா என்பவரது மகன் டாக்டர் ரகு(வயது 28) மற்றும் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பிள்ளையார் என்பவரது மகன் கேஸ் கம்பெனி வாட்ச்மேன் சின்னச்சாமி (வயது 40) ஆகியோருடன் தென்காசியில் நேற்று நடைபெறும் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள குற்றாலம் வந்துள்ளார்கள். அதிகாலை 3 மணி அளவில் தனது காரில் இவர்கள் அனைவரும் குற்றாலத்திலிருந்து பழைய குற்றாலம் சென்றுள்ளார்கள். அப்போது அந்த காரை குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் வேலு என்பவரது மகன் இசக்கிமுத்து (வயது 29) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த கார் பழையகுற்றாலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நின்ற மரத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் நிலைகுலைந்த அந்த காரில் இருந்த டாக்டர்கள் ரகுகுமரன் (வயது29) டாக்டர் கார்த்திக் (வயது 28), வாட்ச்மேன் சின்னச்சாமி (வயது40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அதே காரில் இருந்த டாக்டர் தினேஷ்

(வயது 28) டாக்டர் ரகு(வயது 28) மற்றும் கார் டிரைவர் இசக்கிமுத்து (வயது 29) ஆகிய 3 பேர்களும் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றி தகவலறிந்த குற்றாலம் போலீஸார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த 3 பேர்களையும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின் விபத்தில் இறந்த டாக்டர் ரகுகுமரன், டாக்டர் கார்த்திக், வாட்ச்மேன் சின்னச்சாமி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின் உடலை அவர்களது உறவினர்களிடம் 

ஒப்படைத்தனர். இந்த விபத்து பற்றி குற்றாலம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago