எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிஜிங், பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோனி, உரிமையாளரின் சூதாட்ட மோகத்தால் திவாலாகி உள்ளது.
சீனாவின் பிரபல மொபைல் நிறுவனம் ஜியோனி. குறைந்த விலை உட்பட ஏராளமான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து, ஆசிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக திகழ்ந்தது. சில ஆண்டுகளாக இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி உள்ளது. ஆகஸ்ட் 2018 வரை அந்நிறுவனத்திற்கு 20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜியோனி நிறுவனத்தின் நிறுவனர் லியூ லிராங் கூறுகையில், ஜியோனி நிறுவனம், 2013-15ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 14.4 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தாக தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ஸ்பெயின் சென்றிருந்த லியூ, அங்கு சூதாட்டத்தில் மட்டும் 10 பில்லியன் யுவானை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் சப்ளையர்களுக்கு தர வேண்டிய தொகை கொடுக்காமல் அப்படியே நின்று போய் விட்டது. கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு ஜியோனி நிறுவனத்தை முறையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜியோனி நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி அங்குள்ள ஷென்ஷென் கோர்ட்டில் முறையிடப்பட்டது. கோர்ட்டும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜியோனி நிறுவனம், இந்தியாவில் ரூ. 650 கோடி முதலீடு செய்ய இருப்பதாக இந்தாண்டில் செய்திகள் வெளியாகின. அப்படியான சூழலில், அந்நிறுவனம் திவாலாவது இந்திய சந்தைகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


