முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவுக்கு செல்ல முயன்ற பாக்.முன்னாள் பிரதமர் தடுத்து நிறுத்தம்

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லாகூர் : தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்  யூசுப் ரசா கிலானியை லாகூரில் உள்ள விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பயணத்தை ரத்து செய்தனர்.

பாகிஸ்தானில் 2008-2012 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமராக இருந்தவர் யூசுப் ரசா கிலானி. இவர் தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒரு விளம்பர நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூரில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் யூசுப் ரசா கிலானி பெயர் இருப்பதை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரது பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து