எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில், வருகிற 14-ந் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
‘அறிந்தும் அறியாமலும்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ட்விட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். கடந்த 9-ந் தேதி மாலை ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் ஆர்யா - சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
ஆர்யா-சாயிஷா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது. திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம், ராணா தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், ஞானவேல் ராஜா, தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வருகிற 14-ந் தேதி சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


