முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல் : துருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வதற்காக அங்குள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அவர் தனது விமான டிக்கெட்டை அதிகாரிகளிடம் காட்டி விமான நிலையத்துக்குள் நுழைந்தார். பின்னர் அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் அந்த பெண் வைத்திருந்த உடைமைகளை வாங்கி, பேக் செய்து கன்வேயர் பெல்ட் வழியாக அனுப்பினர்.

மேலும் அந்த பெண்ணிடம் உங்கள் உடைமைகள் நீங்கள் செல்லும் விமானத்துக்கு வந்து சேரும் என ஊழியர்கள் கூறினர். அதை கேட்ட அந்த பெண் கன்வேயர் பெல்ட் தன்னையும் விமானத்தில் கொண்டு சேர்த்து விடும் என நினைத்து அதில் ஏறினார்.

இதனை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ந்து போயினர். என்ன நடக்கிறது என்று அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த பெண் கன்வேயர் பெல்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக விமான ஊழியர்கள் அவரை மீட்டனர்.

இளம்பெண்ணின் இந்த வினோத செயல் விமான நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவர் கன்வேயர் பெல்ட்டில் ஏறி, தடுமாறி விழும் காட்சிகள் விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து