முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 62 வது நினைவு தினம் :ஆளில்லா விமானம் பறக்க விடப்பட்டு கண்காணிக்கப் படுகிறது - 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 பரமக்குடி - பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 62 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆளில்லா விமானம் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
 பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 62 வது நினைவு தினம் ஆண்டுதோறும் செப்.11 ம் தேதி அனுஷ்டிக்கப் படுகிறது.இதனைத் தொடர்ந்து இன்று(11 ம்தேதி) பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
 இதையடுத்து கூடுதல் ஏ.டி.ஜி.பி.ஜெயந்த் முரளி தலைமையில் ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டிஐ.ஜி.ரூபேஸ் குமார், 5 டி.ஐ.ஜி,18 எஸ்.பி,18 ஏ.டி.எஸ்.பி,44 டி.எஸ்.பி மற்றும் சிறப்பு அதிரடி படையினர் உள்பட திண்டுக்கல், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை,4 ஆயிரத்தி 500  போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
  100 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.200 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அஞ்சலி செலுத்த வருபவர்களையும், வரும் வாகனங்களை கண்காணிக்கவும் சென்னை அண்ணா பல்கலைக் கழக எம்.ஐ.டி.தட்ஷா பிரிவைச் சேர்ந்த மாணவர்களின்
ஆளில்லா விமானம் சோதனை ஓட்டம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் நடந்தது. இதனை கூடுதல் டி.ஜி.பி.ஜெயந்த் முரளி தொடங்கி வைத்தார்.இந்த ஆளில்லா விமானம் 500 மீட்டர் உயரத்தில் பறந்து சென்று சுமார் 3 கி.மீ.தூரம் வரை நடக்கும்  நிகழ்வுகளை பதிவு செய்து காவல் நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். அதன்மூலம் அசம்பாவிதம் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடந்தாலோ உடனடியாக கண்டறியப் படும்.
3 உயர் கோபுரங்கள் அமைத்து அதில் போலீசார் நின்று அதிநவீன பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
 போலீஸ் வாகனங்கள் மூலம் இரவு - பகலாக போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டிஜி.பி.ஜெயந்த் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், பரமக்குடி பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.அஞ்சலி செலுத்த வருபவர்கள் அமைதியான முறையில் வந்து சென்று காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து