முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் வரும் 27-ம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார் - வெளியுறவுச் செயலர் கோகலே தகவல்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வரும் 27-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் என வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜய் கோகலே, வரும் 27-ம் தேதி ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றினார். அதன் பிறகு தற்போது வரும் 27-ம் தேதி உரையாற்ற உள்ளார்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் குளோபல் கோல்கீப்பர்ஸ் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அந்த விருதுக்காக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்வச் பாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச் சபையின் 74-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகின்றனர். அதன்படி பிரதமர் மோடி உரையாற்றும் தேதியை வெளியுறவுச் செயலர் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் வரும்  22-ம் தேதி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்து உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் இந்திய - அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்துள்ள ஹவ்டி மோடி பேரணியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்கிறார் என்பது பெருமகிழ்ச்சியளிப்பதாக கோகலே கூறினார். பாகிஸ்தான் வான்வழிப் பாதையில் இந்தியப் பிரதமர் செல்லும் விமானம் பறக்க அந்நாடு தடை விதித்திருப்பது குறித்த கேள்விக்கு, இது துரதிர்ஷடவசமானது. ஆனால், இதனை ஓர் இயல்பான தேசம் செய்யவில்லை. தான் செய்திருக்கும் தவற்றை நிச்சயம் பாகிஸ்தான் ஒருநாளில் உணரும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து