எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து நிலைகளிலும் அமைச்சர்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி அவர் உத்தரவிட்டார்
21, 597 மீட்பாளர்கள் தயார்
வடகிழக்குப் பருவமழை தொடங்கி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்தும் தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், கடந்த 21-ம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில்,
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வடகிழக்கு பருவ மழை தொடர்பான ஆயத்த நிலை குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் உயர் அலுவலர்களுடன் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்டங்களில் நேரடியாக ஆயத்த பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதியும் மற்றும் 4-ம் தேதியும் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புஅலுவலர்கள் பங்கு கொண்ட ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்குப் பருவ மழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9,162 பெண்கள் அடங்கிய 21,597 எண்ணிக்கையிலான முதல் நிலை மீட்பாளர்களும், மேலும் கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
2.62 ஆயிரம் மி.கன அடி நீர் சேமிப்பு
பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, 17,866 தடுப்பணைகள் கட்டப்பட்டு 14,946 கசிவு நீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,250 நீர் செறிவூட்டும் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத 11,080 ஆழ்துளைக் கிணறுகளும். 3,434 திறந்த வெளிகிணறுகளும், நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 3,174 கிலோ மீட்டர் நீளம் ஆற்றுப்படுகைகள் தூர்வாரப்பட்டன. 3,662 ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 8,749 பாலங்கள் மற்றும் 1,40,228 சிறு பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 7.44 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரப்பட்டது. இதன் மூலம் 2.62 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரினை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை 6.60 லட்சம் விவசாயிகள் நிலத்திற்கு உபயோகித்து பயனடைந்துள்ளனர். மேலும், முடிவு பெறாத பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
நிவாரண மையங்கள், தயார் நிலையில் காவலர்கள்
மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும்இயந்திரங்கள், 2,897 ஜே.சி.பி. இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483ராட்சத பம்புகள் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களாக தயார் நிலையில் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், 1.00 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நடமாடும் முதல் நிலை மீட்பாளர் குழு ஒவ்வொரு பகுதி / வட்டம் / மண்டல வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைதவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
6 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்களுக்கும், 1,400 காக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், டி.என்.ஸ்மார்ட் செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பருவமழை காலத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நோய் பரவலை தடுக்க நடவடிக்கை
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளிச்சிங் பவுடர், மற்ற பொருட்கள், மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் /பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நீலகிரிக்கு பயிற்சி பெற்ற வீரர்கள்
வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும், அனைத்து துறையினை சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையினரால் பயிற்சி அளிக்கப் பெற்ற 50 வீரர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து கூடுதல் தீயணைப்பு வீரர்களை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பவும், மாநிலத்தில், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய இடங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார்.
இந்தக் கூட்டத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட திட்டங்களும், அதன் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், உடனடித் தேவைகள் மற்றும் கூடுதல் உபகரணங்கள், சிறப்புக் கருவிகள் போன்றவை வாங்குவதற்கும் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர், அமைச்சர்கள்
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர். க.சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர்ககன் தீப் சிங் பேடி, எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் பாலசந்திரன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் ஜெகந்நாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே.பாஸ்கரன், பேரூராட்சிகளின் இயக்குநர். எஸ். பழனிசாமி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சி.கே. காந்திராஜன், அனைத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்
- திருவாரூர் தியாகராஜர் வீதி உலா.
-
இன்றைய ராசிபலன்
13 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
13 Mar 2026


