முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி வழக்கு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடன் உ.பி. உயரதிகாரிகள் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

அயோத்தி நில விவகார வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று சந்தித்து பேசினர்.

அயோத்தியில் பாபர் மசூதி - ராமஜென்ம பூமி நில விவகார வழக்கில் நிலத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 40 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இருதரப்பு வாதங்கள் கடந்த மாதம் 16-ம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அயோத்தி நில விவகார வழக்கில் தீர்ப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு விரைவில் வெளியாவதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அயோத்தியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் தேவையில்லாத கருத்துகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பதிவிட வேண்டாம் என்றும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உத்தரப் பிரதேச பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியைச் சந்தித்து பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து