முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா, பி.பி.சி.எல். நிறுவனங்களை விற்க மத்திய அரசு முடிவு: நிர்மலா சீதாராமன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சில கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், ஏர் இந்தியா மற்றும் பி.பி.சி.எல். நிறுவனங்களை வரும் மார்ச்சுக்குள் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய மத்திய அரசு தேவையான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்டி வரி வசூலில் முன்னேற்றம் ஏற்படும். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வங்கிகள் மூலமாக 1.8 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டதால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்து ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் பணம் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதனால், இந்தாண்டு இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மற்ற கள நிலவரங்கள் குறித்து ஆராயப்படும். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன. முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் ஏதும் வராததால், ஓராண்டுக்கு முன்பே, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை விற்க முடியாமல் போனது. பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல துறைகள் நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளன.சில துறைகளில் ஜி.எஸ்.டி வரி வசூலால் விற்பனை அதிகரித்துள்ளது. ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள்  (பி.பி.சி.எல்) மார்ச் மாதத்திற்குள் (இந்த நிதியாண்டு) விற்பனை செய்யப்படும். எஸ்ஸார் ஸ்டீல் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஐ.பி.சி. சட்டத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்ட வலிமையை நிலைநிறுத்தி உள்ளது. அடுத்த காலாண்டில் வங்கிகளின் இருப்புநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து