முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்துள்ளது.

டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று திடீரென தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது.

சென்னையில் நேற்று (டிசம்பர் 14) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 22 ரூபாய் உயர்ந்து 3,622 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இதன் விலை ரூ.3,600 ஆக இருந்தது. அதே போல, 28,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 28,976 ரூபாயாகக் அதிகரித்தது. நேற்று சவரனுக்கு 88 ரூபாய் விலை உயர்ந்தது.  சென்னையில் வெள்ளியின் விலை நேற்று மாற்றமின்றி காணப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.30 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,300 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து