முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

பாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

கள்ளச்சந்தை மூலமாக அணு ஆயுதத்தை குவிப்பதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மூடி முத்திரையிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட  அறிக்கை  ஒன்று நீதிபதி முன்னிலையில் பிரிக்கப்பட்டது. அதில் 5 பிரபல குற்றவாளிகள் குறித்த குறிப்புகள் இருந்தன. அமெரிக்காவில் தயாராகும் பொருட்களை அந்த 5 பேரும் கடத்திச் சென்று இரண்டு பாகிஸ்தான் அரசு ஏஜென்சிகளுக்கு பெரும்தொகைக்கு விற்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏஜென்சிகளும் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தில் தொடர்பு உடையவை. பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை ஆதரிப்பதற்காக விமானப் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற  போக்குவரத்துப் பொருட்களுக்கு ஐந்தாண்டு காலப்பகுதியில் சர்வதேச கொள்முதல் வலையமைப்பை இயக்க உதவி உள்ளனர்.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியை இருப்பிடமாக கொண்ட பிசினஸ் வேர்ல்ட் என்ற முன்னணி நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில்  முஹம்மது அஹ்சன் வாலி(48), மற்றும் ஹாஜி வாலி முஹம்மது ஷேக் (82) தந்தை மற்றும் மகன் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரில் பாகிஸ்தானில் உள்ள ஷேக்கின் மகன்களில் ஒருவர், ஹாங்காங்கை சேர்ந்த ஒருவரும், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. பாகிஸ்தானின் ஆயுதப் படைகளுக்கும், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை  வழங்கும் மேம்பட்ட பொறியியல் ஆராய்ச்சி அமைப்புக்காக  (ஏரோ) அமெரிக்காவிலிருந்து பொருட்களை வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டவர் 2014 செப்டம்பர் முதல் 2019 அக்டோபர் வரை பணியாற்றியதாக நீதித்துறை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கருப்புச் சந்தை மூலம் அணு ஆயுதத்தை பெருக்கி  வருவதாக அமெரிக்க நீதித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கான துணை அட்டர்னி ஜெனரல் ஜான் சி டெமர்ஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து