எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்குங்கள் என்று சென்னையில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.
அம்மா பேரவை கூட்டம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நேற்று மாநில அம்மா பேரவையால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசியதாவது:
மறைந்த முதல்வர் அம்மாவின் 72 - வது பிறந்த நாள் விழாவை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காக கழக அம்மா பேரவையின் சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எழுச்சிமிகு சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமையுரையாற்றிய அமைச்சர், அருமை சகோதரர் ஆர்.பி. உதயகுமார் அவர்களே, எனக்குப் பின்னாலே சிறப்பான கருத்துக்களை வழங்க இருக்கின்ற கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர் துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய ஓ.பன்னீர்செல்வம் அவர்களே மற்றும் அனைவருக்கும் வணக்கம்,
ஏழைகளுக்கு உதவுங்கள்
அம்மா அவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி. தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு உழைத்து மக்களிடத்திலே, இதயத்திலே குடியிருந்த தலைவி என்று சொன்னால் அது அம்மா என்று சொல்வார்கள். இன்றைக்கு பெற்ற அம்மாவை அம்மா என்று சொல்லுகின்றோமோ, இல்லையோ, ஆனால் அம்மா என்று சொன்னால் அம்மாவைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காக உழைத்து, தன் உடலில் ஏற்பட்ட நோயைக்கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி அம்மா. அம்மாவினுடைய பிறந்த நாள் விழா எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
வருவாய்த் துறை அமைச்சர், கழக அம்மா பேரவையினுடைய செயலாளர் இங்கே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றார். அம்மா இருக்கின்றபொழுது குறிப்பிடுவார்கள். நீங்கள் ஏதாவது ஏழைகளுக்கு செய்யுங்கள், அது எனக்கு மகிழ்ச்சியை தரும் என்று சொல்வார்கள். அதேபோல, வருகை தந்திருக்கின்ற நிர்வாகிகள் நம்முடைய ஒன்றிய, நகர, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் இருக்கின்ற அத்தனை பேரவையினுடைய நிர்வாகிகளும் ஒத்துழைப்போடு இன்றைக்கு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள். உங்களுடைய வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் தான் அந்த விழா என்று நினைத்து விடாதீர்கள், மனம் இருந்தால் போதும். அம்மா என்ற தெய்வம் நம் உள்ளத்திலே இருக்கின்றார் என்பதை அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு எடுத்துக்காட்டுகின்ற விதமாக, தங்களால் இயன்ற அளவிற்கு ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். இங்கே இருக்கின்ற முதியவர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை கொடுங்கள், அன்னதானம் வழங்குங்கள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்குங்கள், அவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள். மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு பழங்கள், பால், ரொட்டி போன்றவற்றை வழங்கலாம். மேலும் வசதி இருந்தால், அந்த மருத்துவமனைக்குத் தேவையான பொருட்களை வழங்கலாம், படுக்கை வழங்கலாம், கட்டில் வழங்கலாம் அந்தப் பகுதியில் இருக்கின்ற நிர்வாகிகள் தங்களது நிதி வசதிக்கேற்றவாறு இப்படி ஏதாவது உதவிகள் செய்தால், அது அம்மாவுக்கு செய்கின்ற நன்றி என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு, அம்மா அவர்கள் கட்சியை இமை காப்பதைப் போல காத்தார்கள். அதனால்தான் இன்றைக்கு நாம் வளர்ந்து இந்த இடத்தில் குழுமியிருக்கின்றோம் என்று சொன்னால், அம்மாவினுடைய உழைப்பால் இன்றைக்கு நிமிர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை நாம் அடைந்திருக்கிறோம். அந்த வகையிலே, நாம் அத்தனை பேரும் அம்மாவின் அன்பைப் பெற்றவர்கள். அதற்கு நன்றிக் கடனாக அம்மா மீது பற்றுள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டங்களை சொல்லுங்கள்
இங்கே வருகை தந்திருக்கின்ற நிர்வாகிகள், அரசாங்கம் போடுகின்ற திட்டங்களை முழுமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஏராளமான திட்டங்களை நாம் மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால், நாம் போட்ட திட்டங்கள், இன்னும் முழுமையாக கிராமத்திலிருந்து நகரம் வரை உள்ள மக்களுக்கு போய் சேரவில்லை. ஏனென்றால், திட்டம் போய் சேர்ந்திருக்கின்றது, ஆனால் நாம் போட்ட திட்டங்களை மக்களுக்குப் புரிய வைக்கவில்லை. அதை, நம்முடைய பேரவை நிர்வாகிகள் புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், பேரவை நிர்வாகிகள் இந்த இயக்கத்திற்கு இதயம் போன்றவர்கள். அப்படி நீங்கள் இருக்கின்ற காரணத்தினாலே தன்னலம் இல்லாமல் சேவை செய்வதற்குத்தான் அம்மாவினுடைய பேரவை அப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது. நான் 1985-ஆம் ஆண்டில் பேரவையில் இருந்தவன் என்ற முறையிலே நான் சொல்கின்றேன், பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கின்றோம். அதேபோல, நீங்களும் பேரவையிலே தன்னலமற்று சேவை புரிகின்றபொழுது உயர்ந்த இடத்திற்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அம்மாவினுடைய 72-வது வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக, எழுச்சியாக, அனைத்து மக்களும் போற்றுகின்ற அளவிற்கு, பாராட்டுகின்ற அளவிற்கு உங்கள் பணிகள் அமைய வேண்டும் என்று வாழ்த்தி, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025