எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். அதில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூலம் வருகிறார்கள். எனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விமானநிலையங்கள், துறைமுகங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் மருத்துவக்குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை.
தமிழகத்திலும் எந்த பாதிப்பும் கிடையாது. கொரோனா வைரஸ் குறித்து தினமும் ஆய்வு நடத்தப்படுகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரோசு எடுத்துள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவை அச்சுறுத்தும் வைரஸ்
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஹாங்காங், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் இந்த நோய்க்கு இதுவரை 81 பேர் பலியாகிவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026


