எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பீகாரில் ஒரு பெண்ணுக்கும் ராஜஸ்தானில் ஒரு வாலிபருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கத்தால் இதுவரை 2744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாங்காங், மெக்சிகோ மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை சீனா மேற்கொண்டுள்ளது. விலங்குகளை விற்கவோ, வளர்க்கவோ, இறைச்சிக்காக பயன்படுத்தவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது. மேலும், வுகானில் இதற்காக பிரமாண்ட மருத்துவமனை கட்டப்படுகிறது.
வுகானில் இன்னும் 250 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்தியர்கள் பலர் வெளியேறி விட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் வேலைக்காக தனித்து வசிப்போர் மட்டுமே அங்கிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. கேரளாவில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் தனி வார்டில் அவர் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா கூறியுள்ளார். அவரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரசாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பிறகே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுபோல் சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், நேபாளம், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 130 பள்ளிக்குழந்தைகள் மீட்பு
22 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை அதிரடியாக ராணுவம் மீட்டது.
-
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை செல்கிறார்
22 Dec 2025புதுடெல்லி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
இந்தோனேசியாவில் விபத்து - 15 பேர் பலி
22 Dec 2025ஜகார்தா, இந்தோனேசியாவில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் பலியாயினர். மேலும், 19 பேர் காயமடைந்தனர்.
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ. 6,654 கோடி நன்கொடை பெற்ற பாரதிய ஜனதா கட்சி
22 Dec 2025டெல்லி, தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க ரூ.6654 கோடி நன்கொடையாக பெற்று உள்ளது. இதுதொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
-
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கடும் குற்றச்சாட்டு
22 Dec 2025கீவ், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக குற்றச்சாட்டியுள்
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.


