எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் அ.தி.மு.க. அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. எப்போதும் செயல்படும். அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கழகமும், அவர்கள் வழியில் நடைபெறும் அ.தி.மு.க. அரசும், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அ.தி.மு.க. அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே என்ற சகோதரத்துவ உணர்வில் ஆழமான நம்பிக்கை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. இது உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். மதத்தின் பெயரால் மனிதர்களை பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி, எல்லோரையும் சொந்த பந்தங்களாகவும், சகோதரர்களாகவும் நேசித்துப் பழகுவதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை. அதுவே, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் காட்டிய பாதை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க. அரசு, இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருவதும் அ.தி.மு.க. அரசுதான்.
ஹஜ் புனித பயணத்திற்கான மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அ.தி.மு.க. அரசு ஆண்டுதோறும் ஹஜ் மானியமாக 6 கோடி ரூபாயை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5,145 மெட்ரிக் டன் அரிசியை ரம்ஜான் மாதத்தில் வழங்கி வருகிறது. நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளைதமிழ் நாடு அரசே வழங்கி வருகிறது. மாவட்ட ஹாஜிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம். பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் வக்பு நிறுவனங்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி தொகுப்பு நிதி, தமிழ் நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக குறைந்த வட்டியில் கல்விக் கடன், தனிநபர் மற்றும் சிறுகடன்கள் கழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. ஓய்வுபெற்ற உலமாக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1,500/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நான்காயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி பாஸ்போர்ட், பயண உடைமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள ஒரு ஹஜ் இல்லம் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25,000/- ரூபாய் (அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை) மானியமாக வழங்கப்பட இருக்கிறது.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகப் பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அ.தி.மு.க. அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய சமூகத்திற்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். அசாம் மாநிலம் சம்பந்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர, அது நாடு முழுவதற்கும் உரியது அல்ல. சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அசாம் தவிர, இதர மாநிலங்களுக்கான நடைமுறை வேறெந்த மாநிலத்திற்கும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், 1948-ல் அதற்கென்று ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2003-ம் ஆண்டு, மத்தியில், தி.மு.க. அங்கம் வகித்த பா.ஜ.க. ஆட்சியின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாக, குடியுரிமைச் சட்டம், 1955-ன்கீழ் குடியுரிமை விதிகள், 2003 உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் மூலம் குடிமக்களை பதிவு செய்து, அவர்களுக்கு ஒரு தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்த விதிகளின் கீழ், 2010-ம் ஆண்டு மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் 6 மாதமோ அதற்கு மேலோ வசிக்கின்ற அனைத்து நபர்களின் விபரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின் படி பதிவு செய்யப்படுகிறது. தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விபரம் மற்றும் ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விபரங்கள், 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழ் நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்களாக அமைதியாகவும், ஒற்றுமையாகவும் உழைத்து, வளமான வாழ்வை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தோளோடு தோள் நின்று உழைப்போம்! உயர்வோம்! அ.தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரச்சாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். தமிழ் நாட்டில் எந்தஒரு சிறுபான்மை சகோதர, சகோதரிக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அ.தி.மு.க. அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க. இஸ்லாமிய சமூகத்திற்கு என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் கவனமாகவும் இருந்து அமைதி காத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த