எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று ஜெயலலிதா நிர்ணயித்த இலக்கை நோக்கி, அரசு பயணித்து வருகிறது என்று பொன்னேரியில் ரூ. 217 கோடியில் அமையவிருக்கும் பாலிமர் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி முதல்வர் எடப்பாடி பழனி்சாமி பேசினார்.
பொன்னேரியில் ரூ.217 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் பாலிமர் தொழிற்பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழர்கள் பண்டைய காலத்தில் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினர். தமிழ்நாட்டிலுள்ள கயல், கொற்கை, பூம்புகார், வஞ்சி போன்ற பண்டைய துறைமுகங்களின் வழியாக கிரேக்கம், சீனா, ரோமானியம் உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களுடன் தமிழ்நாடு அன்றைய காலக்கட்டத்திலே வாணிகம் செய்தது என்பதை பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். பன்னெடுங்காலமாக விவசாயம், தொழிற்சாலைகள், கல்வி, கலாச்சாரம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பிடம் பெற்று நல் ஆளுமையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி என்று அம்மா வகுத்த பாதையில் பயணித்து, சட்டம் ஒழுங்கை செம்மையாகப் பராமரித்து, சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திருக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாடு, இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இங்குள்ள நான்கு பெரும் துறைமுகங்கள் மற்றும் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் மூலமாக, உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமும் தமிழ்நாடுதான். உலகெங்கும் உள்ள தொழில் முனைவோரை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்க்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள உறுதியளித்துள்ளன. இவற்றில், 59 நிறுவனங்கள் ஏற்கனவே தமது வணிக உற்பத்தியை துவங்கி விட்டன. மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. வணிகம் புரிதலை எளிதாக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், இணையவழி ஒற்றைச் சாளர முறை, பசுமை வகைப்பாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறும் வழிவகைகளை எளிதாக்குதல், முதலீடுகளைக் கண்காணித்து விரைவுபடுத்த, தொழில் துறையை ஊக்குவிக்க எனது தலைமையிலான உயர்மட்டக் குழு மூலம் பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வந்துள்ளது. எனது தலைமையிலான உயர்மட்ட குழுவினர், அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்றதன் பயனாக 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் பல திட்டங்கள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போது துவக்கி வைத்துள்ள ஜோஹோ ஹெல்த் நிறுவனம் உறுதியளித்த முதலீட்டை விட 16 மடங்கு அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது. கொரியாவின் ஹெனான் மற்றும் ஜப்பானின் மிட்சுபா சைகால் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளது தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழிற் சூழலுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இப்பூங்கா 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அரசின் இதுபோன்ற சிறப்பான முயற்சிகளுக்கு உறுதுணையாக உங்களைப் போன்ற வெளிநாடுகளின் தூதுவர்கள் பலர் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை மறக்க முடியாது.
போர்டு, ஹுண்டாய், யமஹா போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கும், புதிய பல முதலீடுகளை தமிழகத்தில் செய்வதற்கும், இங்குள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் சிறப்பான வழிகாட்டுதல்களையும், பெரும் பங்களிப்பையும் வழங்கி வருகின்றன. ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் தமிழ்நாடு அரசு கூட்டுப்பணி குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி, அந்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து வருகிறது. பிரான்ஸ், அமெரிக்கா, கொரியா, ஆகிய நாடுகளின் தூதரகங்களும் தொழில் துறையுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருக்கும் நீங்கள், தமிழ்நாட்டிற்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லதொரு இணைப்புப் பாலமாக திகழ வேண்டும். தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, உங்கள் நாட்டின் அரசு நிறுவனங்களும், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு நீங்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். சூழல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் நம் நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை வரவேற்க ‘‘யாதும் ஊரே” என்ற திட்டத்தை நியூயார்க் நகரில் நான் துவக்கி வைத்துள்ளேன். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மின்சார வாகனப் பூங்கா, வானூர்தி தொழில் பூங்கா, நிதி சேவைகளுக்கான நகரம், பாலிமர் பூங்கா, உணவுப் பூங்கா என முதலீடுக்குப் பல வாய்ப்புகள் இங்கு உள்ளன. ஆழ்கடல் மீன்பிடி திட்டங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையிலும் அம்மாவின் அரசு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் Saas Capital of India என்று கூறும் அளவிற்கு பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. இதற்குக் காரணம், தமிழ்நாடு ஒரு அமைதியான மாநிலமாகவும், நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை முடித்து விட்டு, திறமை மிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அடுத்த கட்டமாக தொழில் பெருந்தடத் திட்டங்கள் அமையும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் நவீன உலக சூழலுக்கு ஏற்ப, அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றும் சூழலை இத்திட்டங்கள் உருவாக்கும். சென்னை – பெங்களூர் தொழில் பெருந்தட திட்ட செயலாக்கத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக தேசிய தொழில் பெருந்தட மேம்பாட்டுக் கழகத்திற்கும், தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியை கொண்டுள்ள இந்தியாவின் வளர்ச்சி, உலகத்தை புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்கினை வகித்து வருகிறது. எனவேதான், ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று அம்மா நிர்ணயித்த இலக்கை நோக்கி, அரசு பயணித்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் க. சண்முகம், இந்திய வெளியுறவுத் துறையின் செயலாளர் திருமூர்த்தி, இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலாளர் ஹரிஷ்,தேசிய தொழில் பெருந்தடத் திட்ட மேம்பாடு மற்றும் செயலாக்கக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் மூர்த்தி, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், கைடென்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், தொழில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா