எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த் பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. முஸ்லிம்களின் இந்த போராட்டத்துக்கு அந்த பகுதியில் உள்ள மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து எதிர் போராட்டத்தில் குதித்தனர். அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. வடகிழக்கு டெல்லி பகுதியில் தெருக்களில் நிறுத்தப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் டெல்லி வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களை அடித்து உடைத்து தீ வைத்தனர். போலீசார் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்த இயலாமல்போய் விட்டது. இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் மீதும் சரமாரியாக கல் வீசப்பட்டன. மறுநாள் திங்கட்கிழமையும் கலவரம் நீடித்தது. அன்று நடந்த தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லி வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் 3-வது நாளாக கலவரம் நீடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்புவர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். என்றாலும் கலவரம் அடங்கவில்லை. இதனால் போலீசார் சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். கலவரம் நடந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கலவரத்தின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. டெல்லி கலவரத்தில் நேற்று முன்தினம் காலை வரை 5 பேர் பலியாகி இருந்தனர். பிறகு அது 8 ஆக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி 13 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கலவரத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் காரணமாக டெல்லி வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 70 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி கலவரம் 3 நாட்களாக நீடித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். 3 முறை அவர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலவரம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் படைகளை குவிக்கவும், அமைதிக்குழுக்களை உருவாக்கி பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் உடனடியாக பிறப்பிக்கப்பட்டன. அமித்ஷாவின் ஆலோசனையை தொடர்ந்து கூடுதலாக 35 கம்பெனி துணைநிலை ராணுவப்படை வடகிழக்கு டெல்லிக்கு விரைந்தது. அவர்கள் கொடி அணிவகுப்பும் நடத்தினார்கள். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. என்றாலும் வடகிழக்கு டெல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவும் சில இடங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்தது. வீடுகளை தாக்கும் சம்பவம் அதிகரித்தது. இது பற்றி அறிந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் வடகிழக்கு டெல்லி பகுதிக்கு விரைந்தார். கலவரம் நடந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். அதன் பிறகு டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கலவரக்காரர்களில் ஒரு பிரிவினர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தங்களது வீடுகளை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினார்கள். போராட்டம் நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே டெல்லி கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு நீதிபதி முரளிதர் வீட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை போலீசார் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதாக போலீசார் 11 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் கலவரம் தீவிரமானதால் டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சீரானது. நேற்று காலையிலும் சில இடங்களில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் வடகிழக்கு டெல்லி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்தது. பள்ளிக்கூடங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. டெல்லி வன்முறை சம்பவத்தை சில தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்புவதால் பதட்டம் தணியவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் வன்முறை காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி வன்முறை காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கலவரத்தை முழுமையாக ஒடுக்குவதற்காக வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கியில் எச்சரித்து வருகிறார்கள். கல்வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக சுடுவதற்கு டெல்லி போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு டெல்லியில் நேற்று காலை அமைதி நிலவியது. கலவரத்தை ஒடுக்கி மக்களிடம் அமைதியை ஏற்படுத்துவற்காக டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஜினி கண்டனம்
இந்நிலையில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் டெல்லி வன்முறைக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். மத்திய அரசு இது போன்ற வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் என்றும் ரஜினி எச்சரித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா
15 Feb 2026மதுரை, வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை சசிகலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
15 Feb 2026முனிச், அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா அல்லது தொடந்து வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.
-
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு
15 Feb 2026கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சு: நயினாருக்கு ராமதாஸ் கண்டனம்
15 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்
15 Feb 2026புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர்.
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 Feb 2026திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செ
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை
15 Feb 2026முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
வங்கதேசத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது: இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
15 Feb 2026டாக்கா, வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கும் விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதா


