முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நீண்டகால சிறைவாசம் : புதிய உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோருக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கள்ள நோட்டு புகாரில் அவரை கைது செய்வதற்கு வந்த காவல்துறை அதிகாரி, அவரை காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால் கழுத்தை அழுத்தியுள்ளார். சுற்றி இருந்த மற்ற மூன்று போலீஸ்காரர்களும் அவரை தடுக்கவில்லை.

இதனால் ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார்.  ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும்  பெரும் மோதல்கள் வெடித்தன. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவில் நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், மிகவும் வலுவான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க நினைவுச் சின்னங்கள், நினைவிடங்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்கும் மிக வலுவான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

இதன்மூலம், தேசத்திற்கு எதிரான சட்டவிரோத செயல்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்படும் என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த நிர்வாக உத்தரவு தொடர்பான விவரங்களை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை. 

கடந்த திங்கட்கிழமை, வெள்ளை மாளிகை அருகே உள்ள முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையை சேதப்படுத்த போராட்டக்காரர்கள் முயன்றது தொடர்பாக பேசிய டிரம்ப், வலுவான உத்தரவை தான் தயாரித்து வருவதாகவும், அது இப்போதுள்ள சட்டத்தை வலுப்படுத்தும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தலைவர்களின் சிலைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் எந்த ஒரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தினாலோ, சேதப்படுத்த முயற்சித்தாலோ அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க தற்போதுள்ள சட்டம் வகை செய்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து