முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் : பெண் விஞ்ஞானி லி மெங் யான் அதிர்ச்சி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கணிசமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,28,39,566 -ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  5,67,574- ஆக உள்ளது. அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  7,47,7,683-ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோன பற்றிய தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் என சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஹாங்காங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான்  என்ற பெண் விஞ்ஞானி அளித்த பேட்டியில்,  

தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் தான் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியுள்ளார்.  அதில், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்  பற்றி சீன அதிகாரிகளுக்குத் தெரியும்.  கொரோனா தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது. 

அப்போதே வைரஸ் பரவலில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். வைரஸ் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.

உலக சுகாதார அமைப்புடன் இணைந்திருக்கும் தனது சொந்த நிறுவனம், கொரோனா பற்றி மவுனமாக  இருக்குமாறு கேட்டுக் கொண்டதாக டாக்டர் யான் கூறினார்.  அதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்து ஏப்ரல் 28-ம் தேதி கேத்தே பசிபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன். 

சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் அல்லது பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன்.  கொரோனா தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமெரிக்கா வந்தேன் என்று லி மெங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து