முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து அலுவலகங்களும் வரும் 20-ம் தேதி முதல் செயல்பட துவங்கும்: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் செயல்பட துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் தற்போது படிப்படியாக இயங்க துவங்கி உள்ளன. விமான சேவை நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்து செயல்பட்டு வந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்கள் வரும் 20-ம் தேதி முதல் முழுவீச்சில் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு வராதவர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியாவின் நிரந்தர ஊழியர்களுக்கு செயல்திறன், உடல்நலன் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஊதியமில்லா கட்டாய விடுப்பு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து