முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு டோனி போன்று ஒரு வீரர் தேவை: மைக்கேல் ஹோல்டிங்

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்னையத்த 375 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டோனி இல்லாமல் தடுமாறுவது எனக்கு உறுதியாகத் தெரியும். டோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்ல வேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இல்லை. 

தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், டோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். அவருடைய திறமை என்னவென்று அவருக்குத் தெரியும். 

அதேபோல, இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அவருடன் யார் பேட்டிங் செய்தாலும், அவர்களுடன் சகஜமாகப் பேசி அவர்களுக்கு உதவுவார். ரன் சேசிங்கில் டோனி கைதேர்ந்தவர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு டோனியைப் போன்றதொரு வீரர் அவசியம். 

சேஸிங் செய்யும் டோனியிடம் பயத்தை பார்க்க முடியாது. அவருடைய திறமை அவருக்கும் தெரியும். சேஸிங் எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். யார் அவருடன் பேட்டிங் செய்தாலும் அவர்களுக்கு உதவி செய்வார். சிறந்த பேட்டிங் அணிதான். ஆனாரல், சேஸிங் செய்யும்போது டோனி ஸ்பெஷசல் மேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து