முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2021      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த விழாக்களில் பிரமோற்சவ திருவிழாவாக சித்திரை திருவிழாவை குறிப்பிடுவார்கள். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா உலகப்புகழ் பெற்றது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஆனால் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மட்டும் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் இல்லாமல் நடத்தப்பட்டது. அதே போன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா நடைபெற்றது.

இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் 22-ந் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 23-ந் தேதி திக்விஜயம், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24-ந் தேதியும், 25-ந் தேதி பெரிய தேர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

அதேபோன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை 26-ந் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் 27-ந் தேதியும் நடைபெறும். எனவே சித்திரை வருடப்பிறப்பு தொடங்கியதில் இருந்து மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் தொடங்க உள்ளது.

திருவிழாவில் முக்கிய நிகழ்வான சாமி வீதி உலா நான்கு மாசி வீதிகளில் காலை, இரவு என இருவேளை நடைபெறும். தற்போது நான்கு மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு காங்கீரிட் சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. திருவிழாவிற்கு முன்னர் இந்த சாலை பணிகள் நிறைவடையுமா என்பது கேள்விகுறியாக உள்ளது. தெற்கு மற்றும் மேலமாசி வீதிகளில் மட்டுமே 85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்குமாசி வீதி, கீழமாசி வீதிகளில் 50 சதவீத பணிகள் கூட நிறைவேறாத நிலை இருக்கிறது. எனவே நான்கு மாசி வீதிகளில் 100 சதவீத பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவேற்றப்படுமா என்பதே கேள்வியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து